அவினாசிலிங்கம் மனையியல் மற்றும் மகளிர் உயர்கல்வி நிறுவனத்தின் சார்பில் "அன்னை விழா" கடைபிடிப்பு


அவினாசிலிங்கம் மனையியல் மற்றும் மகளிர் உயர்கல்வி நிறுவனத்தில் இன்று திருச்சிற்றம்பலம் அரங்கில் "அன்னை விழா" மிகச் சிறப்பாக கொண்டாடப்பட்டது. இதில், பேராசிரியர் முனைவர் அன்னபூரணி அனைவரையும் வரவேற்று பேசினார். பின், அன்னை சாரதா தேவியின் உபதேச மொழிகள் குறித்து பள்ளி மாணவர்கள் மற்றும் பல்கலைக் கழக மாணவிகள் பலர் எடுத்துரைத்தனர்.

அவினாசிலிங்கம் கல்வி அறக்கட்டளை நிர்வாக அறங்காவலர் முனைவர் மீனாட்சி சுந்தரம் தலைமையுரை ஆற்றினார். அப்போது அவர் கூறுகையில், ஜனவரி மாதத்தில் ஸ்ரீ இராமகிருஷ்ணா மிஷன் வித்யாலயாவில் குருபூஜை முடிந்தவுடன் நமது சாரதாலயத்தில் அன்னைக்கு எடுக்கப்படுகின்ற முக்கிய விழாவாக இது அமைந்திருக்கிறது என்றும், ஆன்மீகப் பணியை சமூகப் பணியாக ஆற்றி பொதுநோக்கத்தோடு தம் வாழ்நாள் முழுவதையும் ஆன்மீக முழுமை நிறைந்ததாக மாற்றியவர்கள் ஸ்ரீ ராமகிருஷ்ண பரமஹம்சரும் சாரதாமணி தேவியாரும் ஆவர் என்றும் கூறினார்.

இதைத்தொடர்ந்து, இந்நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராக பங்கேற்ற சென்னை ஸ்ரீ சாரதா மடத்தின் ஆன்மீக பேச்சாளர் பிரவ்ரார்ஜிகாயதிந்திர பிராணா, "நவீன பெண்களுக்கு தூய அன்னை சாரதையின் உபதேசங்கள்" என்ற தலைப்பில் சிறப்புரை ஆற்றினார்.

நிரைவாக, வேதியியல் துறை பேராசிரியர் முனைவர் சாரதா நன்றியுரை வழங்கினார்.

இந்நிகழ்ச்சியில், துணை வேந்தர் முனைவர் பிரேமாவதி விஜயன், முன்னாள் துணை வேந்தர் முனைவர் சரோஜா பிரபாகரன் மற்றும் பேராசிரியர்கள், மாணவியர்கள் என ஏராளமானோர் பங்கேற்றனர்.

Newsletter

கோவையில் டெங்கு தடுப்பு: பள்ளி, கல்லூரிகளுக்கு சரிபார்ப்பு பட்டியல் வழங்கப்படும்

கோவை மாநகராட்சி 100 வார்டுகளில் டெங்கு தடுப்பு நடவடிக்கைகளை தீவிரப்படுத்தியுள்ளது. 28.08.2026 முதல் பள்ளிகள், கல்லூரிகள்...

கோவை மாநகராட்சி மத்திய மண்டலத்தில் டெங்கு கொசு ஒழிப்பு பணிகள் தீவிரம்

கோயம்புத்தூர் மாநகராட்சி மத்திய மண்டல பகுதிகளில் டெங்கு கொசு ஒழிப்பு பணிகள் தீவிரமாக மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. வார்டு...

கோவை பீளமேடு பகுதியில் டெங்கு ஒழிப்பு உள்ளிட்ட பல்வேறு பணிகளை ஆய்வு செய்த கவுன்சிலர்

சிங்காநல்லூர் சட்டமன்ற தொகுதி வார்டு 27 கவுன்சிலர் அம்பிகா தனபால் பீளமேடு பகுதிகளில் டெங்கு கொசு ஒழிப்பு, சாலை அமைப்பு,...

திருப்பூரில் அமராவதி, திருமூர்த்தி அணைகளில் நீர்மட்டம் உயர்வு

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையின் நீர்மட்டம் ஆகஸ்ட் 27ஆம் தேதி 59.22 அடியாக உயர்ந்துள்ளது. நீர் பிடிப்பு பகுதிகளில...

ஆழியாறு, பரம்பிக்குளம், சோலையாறு அணைகளில் நீர்மட்டம் உயர்வு

ஆனைமலை, பொள்ளாச்சி, வால்பாறை பகுதிகளில் உள்ள அணைகளில் தென்மேற்கு பருவமழை காரணமாக நீர்மட்டம் உயர்ந்துள்ளது. ஆழியாறு அணையி...

கோவையில் போட்டித் தேர்வு பயிற்சி வகுப்புகளுக்கு ஆசிரியர்கள் தேவை

கோவை மாவட்ட வேலைவாய்ப்பு மையத்தில் TNPSC, SSC, RRB, IBPS போன்ற போட்டித் தேர்வுகளுக்கான இலவச பயிற்சி வகுப்புகள் நடத்தப்பட...